மதுரை மீனாட்சி மாசி விழா: தங்க குதிரை வாகனத்தில் அம்மன் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2017 11:03
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி திருவிழா மார்.2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, தங்க குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெள்ளி குதிரையில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.