பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித்திரு விழா பிப்.,17ல் இரவு முகூர்த்தகால் நாட்டுதலுடன் துவங்கியது. பிப்.,28 செவ்வாய் கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் (தீச்சட்டிஎடுத்தல்) அம்மன் தங்கமயில் வாகனத்தில் உலாவருதல் என சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் நேற்று, சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.