பதிவு செய்த நாள்
07
மார்
2017
12:03
குமாரபாளையம்: குமாரபாளையம், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர் சங்கம் சார்பில், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. குமாரபாளையத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் காளியம்மன் மாசித்திருவிழாவை முன்னிட்டு, சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர் சங்கம் சார்பில், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு காவிரி ஆற்றிலிருந்து மேளதாளம் முழங்க, தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. ராஜா வீதி, சேலம் பிரதான சாலை, இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை உள்பட பல்வேறு வீதிகளின் வழியாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், வண்ண விளக்குகளுடன் காளியம்மன் திருவீதி உலா நடந்தது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.