ஈரோடு: புது எல்லை மாரியம்மன் கோவிலில், இன்று பூச்சாட்டு நடக்கிறது. ஈரோடு மாநகராட்சி, 54வது வார்டு நக்கீரர் வீதி, காளமேகம் வீதி, பாரி வீதி, ஓரி வீதி நடுவே சித்தி விநாயகர், புது எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி திருவிழா, இன்று (7ம் தேதி) இரவு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. நாளை (8ம் தேதி) காலை கொடியேற்றம் நடக்கிறது. வரும், 16ல் அம்மன் புஷ்ப பல்லக்கு நகர் உலா, 17ல் அபிஷேக ஆராதனை நடக்கிறது. 20ல் மறுபூஜையுடன் விழா முடிகிறது.