பதிவு செய்த நாள்
08
மார்
2017
12:03
கரூர்: வெங்கமேடு காமாட்சி அம்மன் கோவிலில், மாசித் திருவிழாவை முன்னிட்டு, மாவிளக்கு பூஜை நடந்தது. கரூர் அடுத்த, வெங்கமேடு காமாட்சி அம்மன் கோவில், மாசி திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 6ல் திருவிழா துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் பூஜைகள் நடந்து வந்த நிலையில், நேற்று அம்மனுக்கு அபி?ஷகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், மாவிளக்கு எடுத்து வந்து சுவாமியை வழிப்பட்டனர். அதன்பின், கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மூன்றாம் நாளான இன்று, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கவுள்ளது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.