சாத்துார், சாத்துார் வெங்கடாசலபதி திருக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கோயில் மண்டபத்தில் வீற்றிருந்த சுவாமிக்கு திருமஞ்சனம், மஞ்சள், பால், பழம், பன்னீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதன் பின் மதியம் 11:20 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சுற்றுக்கிராம பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. இரவு 9 :00மணிக்கு சுவாமி நகர் வலம் நிகழ்ச்சி நடந்தது.