பதிவு செய்த நாள்
10
மார்
2017
11:03
பொன்னேரி: அகத்தீஸ்வரர் கோவில் குளத்தில் குப்பை கழிவுகள் சூழ்ந்து பாழாகிவருவதுடன், தற்போது குப்பை தொட்டியும் குளத்தில் மூழ்கி கிடப்பதால் பக்தர்கள் வேதனையடைந்து உள்ளனர். பொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவிலின் முகப்பில், ஆனந்தபுஷ்கரணி என்ற பெயரில் குளம் உள்ளது. இந்த குளத்தில், எப்போதும் தண்ணீர் இருக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளத்து நீரில் கால்நனைத்து தண்ணீரில் தெளித்து கொண்டு செல்வர். கோவில் குளம் உரிய பராமரிப்பு இன்றி கிடப்பதால், குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. குடியிருப்புகளின் கழிவுநீர் நேரிடையாக குளத்தில் விடப்பட்டு, அதன் புனித தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
குளத்தினை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது. 2011–16ம் ஆண்டு, சட்டசபை உறுப்பினர் நிதியில் குளம் சீரமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு, அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இன்றி கிடப்பிற்குபோனது. இந்நிலையில், கோவில் அருகில், குப்பை கொட்டுவதற்காக பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில்,இரும்பு த�ொட் டி ஒன்று வை க்கப்பட்டு இருந்தது. தற்போது, அந்த குப்பை தொட்டி குளத்தில் மூழ்கி கிடக்கிறது. இது தொடர்பாக, பொன்னேரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இன்றிகிடக்கிறது. இதுவரை குப்பையை தான் குளத்தில் போட்டு வந்த நிலையில், தற்போது குப்பையுடன் தொட்டியையும் சேர்த்து குளத்தில் வீசியுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. கோவில் குளத்தில் உள்ள குப்பை மற்றும் தொட்டியை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.