பெத்தநாயக்கன்பாளையம் : பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கல்யாணகிரி தேன்மலை சோமநாத ஈஸ்வரர் கோவிலில், நேற்று காலை 6:00 மணியளவில், விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால வேள்வி, சூர்ய, சோம பூஜை நடந்தது. 9:00 மணியளவில், கோவில் விமான சுவாமிகளுக்கு, மஹா கும்பாபிேஷகம் நடந்தது. அதில், ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர். மேலும், தேன்மலை சித்தர் குருஜி தங்கராஜி சுவாமி, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.