திருவாடானை, திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. மாசி வெள்ளியை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதாயாத்திரையாக சென்றனர். வால்மீகநாதர், பாகம்பிரியாள் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனைகள் நடந்தது. வாசுகி தீர்த்தத்தில் நீராடிய பக்தர்கள், கோயில் வாசலில் மாவிளக்கு வைத்து வழிபட்டனர்.