பதிவு செய்த நாள்
11
மார்
2017
12:03
உத்திரமேரூர்: மானாம்பதியில், வான சுந்தரீஸ்வரர் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி நேற்று வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் பெரிய நாயகி அம்பாள் உடனுறை வானசுந்தரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழாவில், மானாம்பதி வானசுந்தரீஸ்வரர் மற்றும் பெருநகர், இளநகர், சேத்துபட்டு, கீழ்நீர்குன்றம், இளநீர்குன்றம், அத்தி, சேர்ப்பாக்கம், நெடுங்கல், மேல்மா, குரும்பூர், தேத்துறை ஆகிய கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில் இருந்து உற்சவர்கள் வருகை தந்து, மானாம்பதி கூட்டுச்சாலையில் அதிகாலையில் பக்தர்களுக்கு ஒன்றாக அருள் பாலிப்பர்.விழாவையொட்டி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, மானாம்பதி வான சுந்தரீஸ்வரர், மலர் அலங்காரத்தில், நந்தி வாகனத்தில் அமர்ந்து அப்பகுதி முக்கிய வீதிகளில் உலா வந்தார். அப்போது, பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.