கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி ஒன்றியம், பூதிமுட்லு கிராமத்தில், கோதண்டராமசுவாமி கோவில் ஆண்டு விழாவையொட்டி, நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, பின்னர் கோதண்டராமசுவாமிக்கு கல்யாண உற்சவம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். மேலும், நாளை கோதண்டராமசுவாமிக்கு தேர் பவனியும், திங்கள் அன்று ஆஞ்சநேயர் ரத உற்சவமும், செவ்வாய் அன்று பல்லாக்கு உற்சவமும் நடைபெற உள்ளது.