குளித்தலை: குளித்தலை பகுதியில் இருந்து, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, பெண் பக்தர்கள் நடை பயணம் மேற்கொண்டனர். குளித்தலை அடுத்த தோகைமலையில், சமயபுரம் பாதையாத்திரை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், 28வது ஆண்டு பாதையாத்திரை விழா நடந்தது. குருசாமி ராமலிங்கம் தலைமை வகித்தார். தோகைமலை குறிஞ்சி நகரிலுள்ள பகவதிஅம்மன் கோவிலில் இருந்து பாதையாத்திரை புறப்பட்டது. பின், வெள்ளப்பட்டி மாரியம்மன் கோவிலில் நடந்த பஜனை நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பாதையாத்திரையில் தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கரூர் மற்றும் காவிரி டெல்டா பகுதி கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும் நடைபயணமாக சமயபுரம் நோக்கிச் சென்றனர்.