பதிவு செய்த நாள்
13
மார்
2017
12:03
குளித்தலை: கீழகுறப்பாளையம் கிராமத்தில், பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. குளித்தலை அடுத்த வதியம் பஞ்சாயத்து, கீழகுறப்பாளையம் கிராமத்தில் பெரியக்காண்டியம்மன், தங்காள், மாசிபெரியண்ணன், மந்திரம் காத்த மகாமுனி, வீரமலையாண்டி, மதுரை வீரன், காத்தவராயன் ஆகிய சுவாமிகளுக்கு, கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், குளித்தலை காவிரியாற்றில் புனிதநீர் எடுத்து வந்தனர். தொடர்ந்து, மூன்றுகால பூஜைகள், நவகிரக ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி போன்றவை நடத்தப்பட்டு, கோவில் கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர். இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.