பதிவு செய்த நாள்
13
மார்
2017
12:03
நாமக்கல்: நாமக்கல், அன்பு விநாயகர், பகவதி அம்மன் மற்றும் நவக்கிரக கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. நாமக்கல் - சேலம் சாலை அருகே உள்ள அன்பு நகர் - 2ல், அன்பு விநாயகர், பகவதி அம்மன் மற்றும் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, முதற்கால யாக வேள்வி, இரண்டாம் கால பூஜைகள் நடந்தன. நேற்று, அன்பு விநாயகர், பகவதி அம்மன், நவக்கிரக சுவாமிகளுக்கு, புனித நீர் ஊற்றி மாக கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தினர். ஏற்பாடுகளை விழா குழுவினர், அன்பு நகர் - 2 பகுதி மக்கள் செய்தனர்.