Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வள்ளிமலை சுப்பிரமணியர் கோவிலில் ... காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் தவன உற்சவம் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் மொரீஷியஸ் நாட்டினர் தரிசனம்
எழுத்தின் அளவு:
கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் மொரீஷியஸ் நாட்டினர் தரிசனம்

பதிவு செய்த நாள்

14 மார்
2017
12:03

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் உள்ள தேரை, மொரீஷியஸ் நாட்டினர் வணங்கினர். ஆப்பிரிக்க கண்டத்திற்கு, தென் கிழக்கு கடலோர பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு மொரீஷியஸ். இந்நாட்டில் உள்ள ஐ லேண்ட் என்ற இடத்தை சேர்ந்த திருமால் சண்முகம் பிள்ளை என்பவர், தன் குடும்ப உறுப்பினர்கள், ஆறு பேருடன் கடந்த, 4ல் சென்னை வந்தார். அங்கிருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த அவர், பெங்களூரு இஸ்கான் கோவில், மைசூரு சாமுண்டீஸ்வரி கோவில் ஆகியவற்றுக்கு சென்று விட்டு, நேற்று காலை, ஓசூர் அடுத்த மோர்னப்பள்ளியில் உள்ள பிருத்யங்கிராதேவி கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, ஓசூர் தேர்ப்பேட்டைக்கு வந்த, அவரது குடும்பத்தினர் கல்யாண சூடேஸ்வரர் கோவில் அருகே, தேர்த்திருவிழா முடிந்து நிறுத்தப்பட்டிருந்த தேரை பார்வையிட்டு, உப்பு, மிளகு ஆகியவற்றை போட்டு வணங்கினர். அத்துடன், கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் இருந்த, சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்தனர். தேர்ப்பேட்டை தெப்பக்குள கரையில் உள்ள பத்ர காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்தவாறு, மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர் கோவிலை பார்த்து வணங்கினர். பின், அங்கிருந்து புறப்பட்ட அவர்கள், கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று விட்டு, திருப்பதி செல்வதாக தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 
temple news
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், யுகாதி விழா, நேற்று ... மேலும்
 
temple news
நகரி: தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில், புதிய பஞ்சாங்கம் வாசிப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar