ஊமச்சிகுளம்: மதுரை வடக்குமாசி வீதி நவநீதகிருஷ்ண சுவாமி கோயில் தெப்ப உற்சவ விழா நடந்தது. பகலில் ஸ்ரீதேவி, பூமா தேவியருடன் கோயிலில் இருந்து புறப்பட்ட சுவாமி மண்டகப்படிகளில் எழுந்தருளி மாலையில் திருப்பாலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் மகாலில் எழுந்தருளினார்.அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடந்தது. இரவில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி, தெப்பத்தை சுற்றி வலம் வந்தார். இரவில் பூப்பல்லக்கில் எழுந்தருளி திருப்பாலை ஊருக்குள் வீதி உலா வந்தார். அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் வடக்கு மாசி வீதி கோயிலை வந்தடைந்தார்.