பதிவு செய்த நாள்
17
மார்
2017
11:03
கூடலுார்: கூடலுார், சக்தி விநாயகர் கோவில், 31வது ஆண்டு தேர் திருவிழா, சிறப்பாக நடந்தது. கூடலுார் சக்தி விநாயகர் கோவில், 31வது ஆண்டு விழா, கடந்த, 8ல் துவங்கியது. 10, 11 மற்றும் 12ம் தேதிகளில், காலை முதல் சிறப்பு பூஜைகள்; இரவு, 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 13ம் தேதி காலை, 6:00 மணிக்கு முதல் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு உத்திர நட்சத்திர வருஷாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 3:30 மணிக்கு அலகரிக்கப்பட்ட தேரில், விநாயகர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை கூடலுார் டி.எஸ்.பி., சீனிவாசலு துவக்கி வைத்தார். ஊர்வலம் நகர் வழியாக மேல் கூடலுார் மாரியம்மன் கோவில், மைசூர் சாலை முனீஸ்வரன் கோவில்வரை சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.