குளித்தலை: பேராளம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, பால்குடம் ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. குளித்தலை, பேராளம்மன் கோவில் திருவிழா கடந்த, 15ல் காப்புகட்டு தலுடன் துவங்கியது. நேற்று, பேராளம்மன் கோவில் தெரு மக்கள் சார்பில், கடம்பர்கோவில் காவிரியாற்றில் இருந்து, பால் குடம் மற்றும் தீர்த்தக்குடம் வரும் நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, கோவிலை ஊர்வலம் அடைந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவில் நடந்த திருத்தேர் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.