பதிவு செய்த நாள்
28
மார்
2017
01:03
சேலம்: பரமேஸ்வரி கோவிலில், நாளை சிறப்பு வழிபாடு நடக்கிறது. சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். அதன்படி, வரும், 29ல், தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அதிகாலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு பஞ்சாங்கம் படித்தல் மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.