சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் பங்குனி உத்திர கொடியேற்று விழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த காட்டுனவஞ்சூர் முருகன் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சக்தி அழைத்து காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் பூட்டை ரோடு முருகன் கோவில், எஸ்.குளத்துர் சரவணபுரம் ஆறுமுகபெருமான் கோவிலி லும், பங்குனி உத்திர கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது.