பதிவு செய்த நாள்
03
ஏப்
2017
12:04
செங்கல்பட்டு: பாரதபுரத்தில், எல்லையம்மன் கோவில், கும்பாபிஷேக விழா நேற்று, நடைபெற்றது. செங்கல்பட்டு அடுத்த, ஆலன்சாலை பாரத புரத்தில், எல்லையம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவில், திருப்பணி கடந்த ஒராண்டுக்கு முன் துவக்கப்பட்டு, கடந்த மாதம் முடிந்தது. அதை தொடர்ந்து, நேற்று காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடந்தது. காலை, 10:25 மணிக்கு, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர்.எல்லையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. விழாவில், மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் சவுகத் அலி உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், பாரதபுரம் கிராமத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்கள். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் பழனிச்சாமி தலைமையில், பொதுமக்கள் செய்திருந்தனர்.