பல்லடம்;ஸ்ரீமத் ராமானுஜரின், ஆயிரமாவது ஆண்டு அவதார திருவிழா, காமநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்றது. மதுரை காயத்ரி நாராயண சபா டிரஸ்ட் நிறுவனர் கூடல் ராகவன் தலைமை வகித்தார். விழாவையொட்டி, காயத்ரி ரங்கஸ்ரீ பரத நாட்டியம் மூலம், நாட்டியாஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின், ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பண்டரி பஜனை குழுவினரின் பஜனையுடன் திருவீதி உலா நடந்தது. ராமானுஜர் உற்சவமூர்த்தியுடன் புறப்பட்ட ரதம், காமநாயக்கன்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக திருவீதிஉலா சென்றது. அவர் குறித்த, உபன்யாசம், பெருமைகளை, பாகவத கோஷ்டியினர் பொதுமக்களுக்கு விளக்கினர். அதன்பின், பெருமாள் கோவிலில் மகா தீபாராதனை நடைபெற்று, பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.