பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2017 12:04
கோவை : நஞ்சுண்டாபுரத்தில் நடைபெற்ற, பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான, பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை நஞ்சுண்டாபுரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா, கடந்த, மார்ச், 28ம் தேதி காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு, 7:00 மணிக்கு, பூச்சாட்டுதலும், அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனையும் நடந்தன. நேற்று காலை 9:00 மணிக்கு, 48 அடி நீள குண்டத்தில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏாளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 3:00 மணிக்கு, அரண்மனைப் பொங்கல் மற்றும் ஊர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.