அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். எட்டாம் நாள் விழாவாக நேற்று காலை விரதம்இருந்த பெண்கள் கோயிலின் முன்பு பக்தியுடன் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். கோயிலை சுற்றி அங்கப் பிரதட்சணம் செய்தனர். இன்று பூக்குழி: இதுபோல் நேற்று காலை மற்றும் மாலையில் பக்தர்கள் 51, 101 சட்டிகளுடன் அக்னி சட்டிகள் எடுத்து ஊர்லவலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று அதிகாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடக்கிறது.