காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், நேற்று காலை வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகப்பெருமான் வீதியுலா நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த வியாழக்கிழமை துவங்கி, தினமும் சுவாமி வீதிவுலா சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று காலை, 11:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் ஆறு முகப்பெருமான் வீதிஉலா நடைபெற்றது. மாலை, 6:00 மணிக்கு, பிச்சாடனர் கோலத்தில் ஏகாம்பரநாதர் வீதியுலா நடைபெற்றது. இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, ஆள் மேல் பல்லக்கில் சுவாமி ஊர்வலமாக செல்வார். இரவு வெள்ளி மாவடி சேவை தல மகிமை விசேஷ காட்சியுடன் சுவாமி ஊர்வலம் நடை பெறும்.