பதிவு செய்த நாள்
08
ஏப்
2017
11:04
ஆர்.கே.பேட்டை: வெள்ளிக்கிழமையை ஒட்டி, வெள்ளாத்துாரம்மனுக்கு, நேற்று காலை, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்துள்ளது வெள்ளாத்துாரம்மன் கோவில். ஸ்ரீகாளிகாபுரம். வங்கனுார், அம்மையார்குப்பம், ஆந்திர மாநிலம், சத்திரவாடா, நாராயணவனம், ஏகாம்பகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். ஆடி, தை மாதங்களில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். இது தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு அபிஷேகங்களுடன் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. நேற்று காலை, 10:30 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. உடன், விநாயகர், சுப்ரமணிய சுவாமி, நாகாலம்மன், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர்.