பதிவு செய்த நாள்
08
ஏப்
2017
11:04
திருத்தணி: கல்யாண ராமர் கோவிலில், ராமநவமி, 50வது ஆண்டு விழாவை ஒட்டி, நேற்று, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். திருத்தணி, அனுமந்தாபுரம் தெருவில், கல்யாண ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த, 5ம் தேதி, ராம நவமி, 50வது ஆண்டு விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று மதியம், உற்சவர் கல்யாண சீத்தாராம திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, கல்யாண ராமருக்கும், அனுமந்த சுவாமிக்கும் அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். வரும், 14ம் தேதி ராமர் பட்டாபிஷேகம் மற்றும் உற்சவர் வீதியுலாவும், 15ல், விடையாற்றி, உறி அடித்தல் மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதிவாசிகள் செய்து வருகின்றனர்.