பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
04:04
சின்னசேலம்: சின்னசேலத்திலுள்ள விஜயபுரம் செல்வ முருகன் கோவிலில் பங்குனி தேர் வீதியுலா நடந்தது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவிலில், கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை வள்ளி தேவசேனா சமேத முருகனுக்கு, அர்ச்சகர் ஹரிஹரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, உற்சவருக்கு அலங்காரம் செய்த பிறகு, தேரில் சுவாமி வீதியுலா நடந்தது.இதில், கள்ளக்குரிச்சி ஆர்.டி.ஒ மல்லிகா,சின்னசேலம் தாசில்தார் கமலம் மற்றும் வழக்கறிஞர் பொன்னுசாமி, ஸ்தாபகர் கண்ணன், கோவில் நிர்வாகிகள் குருராஜ்,ராஜாசுப்ரமணியன்,தெய்வசிகாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.