அவலூர்பேட்டை: அவலூர் பேட்டையில் பங்குனி உத்திர விழா நடந்தது. மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா 31ம்தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று காலையில் மூலவர் அபிேஷக ஆராதனை, சக்திவேல் காவடி அபிஷேகம், மகா தீபாராதனையும், சக்திவேல் காவடி ஊர்வலமும் நடந்தது. காலை 9:30 மணிக்கு மலை அடிவாரத்திலிருந்து 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் முதுகில் கொக்கி அணிந்து புஷ்பரத தேர், டிராக்டர், மாட்டு வண்டி மற்றும் கல் உருளைகளை இழுத்து மாடவீதி வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.பிற்பகல் ஆன்மிக சொற்பொழிவும், மாலையில் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.