பதிவு செய்த நாள்
05
நவ
2011
10:11
நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, நவீன தொழில் நுட்பத்துடன் புதிய,"தொடுதிரை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை கோவிலில் ஆர்ஜித சேவா டிக்கெட்கள் பெற, வரையறுக்கப்பட்ட கோட்டாவின்படி, வி.ஐ.பி., ஆர்ஜித சேவா டிக்கெட்கள், திருமலையில் எம்.பி.சி., விடுதி எண்.34ல் உள்ள அலுவலகத்தில், பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சுவாமி தரிசனத்திற்கு ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை, முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மற்றும் வஸ்திர அலங்கார சேவை, அபிஷேக டிக்கெட்களை பெற பெயர்களை பதிவு செய்து கொண்ட பக்தர்கள், தாங்கள் பதிவு செய்துள்ள நாட்களில் டிக்கெட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற தகவல்களை அறிந்து கொள்ளும் விதத்தில், அங்கு தொடுதிரை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.சேவா டிக்கெட்களின் தகவல்களை தேவஸ்தான ஊழியர்களின் உதவியை எதிர்பார்க்காமல் பக்தர்கள், இந்த புதிய இயந்திரம் மூலம் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.