ஊட்டி : முருகன் கோவிலில் முப்பெரும் விழா நடந்தது. ஆனந்தமலை முருகனுக்கு, 12வது ஆண்டு விழா, சித்திரை விழா, ஆன்மிக கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. முருக பெருமானுக்கு அபிஷேக பூஜை, சித்தி செல்வ விநாயகருக்கு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. மனோ, ரவி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தஞ்சை அருளாளர் ஆனந்தசித்தர், பிரீத்தி குழுவினரின் கலாசார நடனம் நடந்தது. ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் ராமசந்திரன் செய்திருந்தார்.