பதிவு செய்த நாள்
11
ஏப்
2017
03:04
கூடலூர் : கூடலூர், மரப் பாலம் சீனகொல்லி சந்தன முருகன் கோவில் திருவிழா, காலை, 6:30 மணிக்குகணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு முருகனுக்கு சந்தன அபிஷேகம் பூஜை நடந்தது. பகல், 1:00 மணிக்கு இரும்புபாலம் ஆற்றிலிருந்து பறவை காவடி ஊர்வலம் துவக்கப்பட்டது. தொடர்ந்து, பால்மேடு, மரப்பாலம்
வழியாக கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பக்தர்கள் பறவை காவடி பூட்டியும், காவடி எடுத்தும் வந்தனர். மாலை, 6:00 மணிக்கு துர்கை ராகு காலபூஜை நடந்தது. நேற்று காலை, 7:30
மணிக்கு முருகபெருமானுக்கு அபிஷேகம் அலங்கார பூஜை யும், மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், 5:00 மணிக்கு கரம் வீதி உலா மற்றும் குடிவிடும் நிகழ்ச்சியும் நடந்தது.