மரக்காணம் அனுமந்தை அங்காளபரமேஸ்வரியம்மன் கோவில் தேர்திருவிழா, இன்று நடக்கிறது. விழாவையொட்டி இன்று காலை 8:00 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், சந்தன அபிஷேகமும், ஆராதனையும் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு பூங்கரகம் வீதியுலாவும், மாலை 4:00 மணிக்கு அம்மன் திருத்தேரில் வீதியுலாவும், தொடர்ந்து தருமராயன்பட்டினம் என்னும் ஐயன்பேட்டையை பாவாடராயனுடன் அழிக்கும் காட்சியும், மயானகொள்ளையும் நடக்கிறது. அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.