பதிவு செய்த நாள்
12
ஏப்
2017
01:04
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியொட்டி துர்க்கை அம்மனுக்கு மகா சண்டியாக பூஜை நடந்தது. ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி நாளில், மகா சண்டியாக பூஜை நடந்து வருகிறது. பங்குனி மாத பவுர்ணமியொட்டி, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், கோ, கஜ, அஸ்வ, சுமங்கலி, பிரம்மச்சாரி, வடுக, கன்னிகா பூஜைகளுடன், மகா மங்கள சண்டி ஹோமங்கள் நடந்தன. இரவு, 8:30 மணியளவில் சந்தன காப்பு, மஞ்சள் நிற ஆடை சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை சம்போடை வனத்தில் உள்ள, மதுரகாளியம்மன் கோவிலில், பவுர்மணியொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. மதுரகாளியம்மன் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடை அணிந்து, காளி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.