பதிவு செய்த நாள்
13
ஏப்
2017
02:04
மஞ்சூர் : அன்னமலை முருகன் கோவில் காவடி பெருவிழா, நாளை நடக்கிறது. நீலகிரியின் பழநி என்றழைக்கப்படும் அன்னமலை முருகன் கோவிலில், ஆண்டு தோறும், ஏப்ரல், 14ம்
தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தில், காவடி பெருவிழா நடக்கிறது. நடப்பாண்டு, 28 ம் ஆண்டு காவடி பெருவிழாவையொட்டி, கடந்த இரண்டு மாதங்களாக கோவில் கோபுரங்களை வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன. இன்று மாலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா துவங்குகிறது. 14ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, கோவில் வளாகத்திலிருந்து, முருக பக்தர்கள்
பங்கேற்கும் காவடி ஊர்வலம் நடக்கிறது. விழாவையொட்டி, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.