பதிவு செய்த நாள்
15
ஏப்
2017
02:04
ஈரோடு: புனித வெள்ளியில், தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இயேசு கிறிஸ்து சிலுவையில் மறித்த நாள், புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.
இவ்விழாவையொட்டி, ஈரோடு பிரப் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., சார்ச், ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள புனித அமல அன்னை சர்ச் உள்ளிட்ட அனைத்து சர்ச்சுகளிலும், சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன் தினம் இரவு தொடங்கி நேற்று காலை, 11:00 மணி வரை, கிறிஸ்துவர்கள், தேவாலயங்களில் மவுன ஜபம் கடை பிடித்தனர். அதன்பின், இயேசுவை சிலுவையில் அறைய சிலுவை சுமந்து செல்லும் நிகழ்ச்சிகள். அவர் இறக்கும் வரையில் நடந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்சிகளில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, பிரார்த்தனை செய்தனர்.
* அந்தியூரை அடுத்துள்ள நகலூரில், 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட செபஸ் தியர் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி
நடந்தது. தொடர்ந்து, முக்கிய வீதிகள் வழியாக, ஆலய பங்கு தந்தை அமல்சார்லஸ் தலைமையில், சிலுவைப் பாதை ஊர்வலம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, சிறப்பு திருப்பலியுடன் ஊர்வலம் முடிவடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் சி.ஐ.ஜி., தேவாயத்திலிலும் மைக்கேல்பாளையம், ஆப்பக்கூடல் தேவாலயத்திலும் தவுட்டுப்பாளையம், சந்தியபாளையம், புதுப்பாளையம், சங்கரப்பாளையம்,
ஆலாம்பாளையம் அத்தாணி ஆகிய பகுதிகளில் உள்ள தேவலயங்களிலும், சிறப்பு பிராத்தனைகள் நடந்தன.