தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கால பைரவருக்கு பக்தர்கள் தேங்காய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பாலமுருகனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.