திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள ராமானுஜரின் 1000-ம் திருநட்சத்திர மகோற்ஸவம் ஏப்.,22 ல் துவங்குகிறது. திருக்கோஷ்டியூரில் 10 நாட்கள் திருநட்சத்திர மகோற்ஸவம் கொண்டாடப்படுகிறது. ஏப்.,22ல் மாலை 4.30 மணிக்கு வேதபாராயணத்துடன் துவங்குகிறது. மாலையில் தங்கப்பல்லக்கில் மகான் திருவீதி புறப்பாடும் நடைபெறும். தொடர்ந்து தினசரி காலை 8:௦௦ மணிக்கு தண்டியலில் புறப்பாடும், காலை 10:௦௦ மணிக்கு ஆச்சாரியன் திருக்கோஷ்டியூர் நம்பிகளுடன் சுவாமி எம்பெருமானாருக்கு நவகலச அலங்கார திருமஞ்சனம், மாலை 6:௦௦ மணிக்கு திருவீதி புறப்பாடும் நடைபெறும். மே 1 ல் காலை 7 மணிக்கு பெருமாள் மங்களாசாசனம், காலை மணிக்கு பெருமாளுடன் திருவீதி புறப்பாடும், இரவு 8:௦௦ மணிக்கு பெருமாளுடன் திருவீதி புறப்பாடும் நடைபெறும். ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தினர் செய்கின்றனர்.