செவிலிமேடு ராமானுஜர் கோவிலில் சிறப்பு பூஜை ஆரம்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2017 11:04
காஞ்சிபுரம் : ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு அவதார விழாவை முன்னிட்டு, செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், இன்று முதல் மே, 1 வரை சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
வைணவத்தின் பெருமைகளை உலகிற்கு பரப்பிய மகான் ராமானுஜர் அவதரித்து, ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ராமானுஜர் கோவிலில், பக்தர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. முதல் நாள் இன்று காலை, 108 கலச அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பக்தர்கள் சார்பில் காலையில் கோவில் வளாகத்தில் ராமானுஜர், 108 அந்தாதி பாடப்படுகிறது. மாதந்தோறும் திருவாதிரை அன்று நடைபெறும் பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். தற்போது ராமானுஜர், ஆயிரமாவது ஆண்டு விழா நடப்பதால், அதற்காக பக்தர்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.