பதிவு செய்த நாள்
22
ஏப்
2017
12:04
திருப்பூர்: ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் மற்றும் ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், மே, 2ல் திருப்பூருக்கு விஜயம் செய்கின்றனர். வரும் மே, 2ம் தேதி மாலை,
5:00 மணிக்கு திருப்பூருக்கு வருகை தரும் சுவாமிகளுக்கு, வாலிபாளையத்தில் உள்ள ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், பூர்ணகும்ப வரவேற்பு அளிக்கப்படுகிறது. தூளிபாத பூஜையை தொடர்ந்து, ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் அருளுரை வழங்குகிறார். கோவை, ஸ்ரீ ஜெயராம பாகவதர் குழுவினரின் பஜனை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, ஸ்ரீ சாரதா சந்த்ரமவுலீஸ்வர பூஜை நடக்கிறது.
மே, 3ம் தேதி காலை, 7:00 முதல், 11:00 மணி வரை, ஸ்ரீ சாரதா சந்த்ரமவுலீஸ்வர பூஜை; 10:00 முதல், பகல், 12:00 மணி வரை, சுவாமிகள் பொதுமக்களுக்கு தரிசனம்; பிக்ஷாவந்தனம், தீர்த்த
பிரசாதம், பாதபூஜைகள் நடைபெறுகிறது. இரவு, 8:00 மணிக்கு சுவாமிகளின், ஸ்ரீ சாரதா சந்த்ரமவுலீஸ்வர பூஜை நடைபெறுகிறது. மே, 4ம் தேதி காலை, 7:00 முதல், 11:00 மணி வரை ஸ்ரீ சந்த்ரமவுலீஸ்வர பூஜை; 10:00 முதல், 12:00 மணி வரை பொதுமக்களுக்கு சுவாமிகள் தரிசனம் தருகிறார்; பிக்ஷாவந்தனம், தீர்த்த பிரசாதம், பாதபூஜைகள் நடைபெறு கிறது. மே, 3 மற்றும், 4ம் தேதிகளில், காலை, 10:00 முதல், பகல், 12:00 மணி வரை, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், சுவாமியை அனை வரும் தரிசனம் செய்யலாம். பாதுகா பூஜை செய்ய விரும்புவோர், காலை மற்றும் இரவு பூஜையின் போது செய்யலாம். தினமும் மாலை,
6:30 மணிக்கு நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பாதுகா பூஜை செய்வோர், இரண்டு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, புஷ்பம் கொண்டு வரலாம். ஸ்ரீ மஹா சுவாமிகளின் தரிசனத்துக்கும் வருவோர், கலாசார உடையில் வரவேண்டும். விழா ஏற்பாடுகளை, திருப்பூர் அவிநாசி ரோடு, ஸ்ரீ சாரதாலய
பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.