பதிவு செய்த நாள்
22
ஏப்
2017
12:04
குன்னுார்: குன்னுாரில், 72வது ஆண்டு முத்துப்பல்லக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர்திருவிழாவில், முத்துப்பல்லக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. 72வது ஆண்டாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில், காலை, 10:00 மணிக்கு வி.பி., தெரு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து கும்ப கலச ஊர்வலம் நடந்தது. இதில், பஞ்சவாத்தியம், பூக்காவடி, அம்பலவயல் காவடி, சிங்காரி மேளம், தேவி ரக் ஷா, சிவன் பார்வதி, விநாயகர், முருகர் அலங்கார ரதம், ராவணனை ஆஞ்சநேயர் வதம் செய்யும் ரதம், முத்துரத காளைகளுடன் நடந்த ஊர்வலம் கோவிலில் நிறைவு பெற்றது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 3:30 மணியளவில் முத்துரத காளை வாகனத்தில், முத்துப்பல்லக்கு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம், பஞ்சவாத்தியம், சிங்காரிமேளம் முழங்க, நடந்தது. இதில், ஆடல் பாடல்களுடன் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை இடம் பெற்றன. ஏற்பாடுகளை கேரளா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.