வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் ஆதிவடிவுடையாள் ஆதீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்த 48வது நாள் மண்டலபூஜை மற்றும் மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. மூலவர் மற்றும் சித்திகணபதி, வராகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மணிகண்ட சுவாமிகள், சிவாச்சாரியார் பொன்னம்பல அடிகளார் சிறப்பு வேள்வி மற்றும் மழை வேண்டி சிறப்பு பூஜை செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழு நிர்வாகி முத்துக்குமாரபாண்டியன், பொதுமக்கள் செய்திருந்தனர்.