பதிவு செய்த நாள்
22
ஏப்
2017
12:04
கோத்தகிரி: கோத்தகிரி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் அச்சு வெல்ல கோட்டையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், 17ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை, 9:00 மணிக்கு, டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் இருந்து, அம்மன் திருவீதி உலா நடந்தது. ஊர்வலத்தில், அலகு வீரர்கள் கத்திப்போட்டு, அலகு சேவையுடன் ஊர்வலமாக வந்தனர். கோவிலில் சிறப்பு நிகழ்ச்சியாக, முழுக்க அச்சு வெல்லத்தில் கோட்டை போல், கோவில் அமைத்து, அம்மனை கொலுவில் அங்கு அமர்த்தி, சிறப்பு பூஜை நடந்தது. பகல், 12:00 மணிக்கு, அபிஷேக ஆராதனையும், 1:00 மணிக்கு அன்னதானமும் இடம் பெற்றது. மாலை, 6:00 மணிக்கு, தத்துவன சைத்தன்யா குழுவினரின் பஜனை நடந்தது.