பதிவு செய்த நாள்
08
நவ
2011
11:11
மூணாறு : சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில், வள்ளகடவு வழியாக புல்மேட்டிற்கு வாகனங்கள் செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்கள், குமுளி, வண்டிபெரியார், வள்ளகடவு, கோழிகானம், 4ம் மைல் வழியாக, புல்மேடு வரையிலும் வாகனங்களில் சென்று, அங்கிருந்து 4 கி.மீ., தூரம் நடந்து, கோவிலை அடைய, வள்ளகடவு - புல்மேடு வழியை, குறுக்கு வழியாகப் பயன்படுத்தி வந்தனர். கடந்த ஜனவரியில், புல்மேட்டில் ஏற்பட்ட விபத்தில், 102 பக்தர்கள் இறந்ததையடுத்து, வள்ளகடவு வழியாக, புல்மேட்டிற்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. வள்ளகடவில் வனத்துறை சார்பில், செக்-போஸ்ட் அமைத்து கண்காணிக்கப்படுவதோடு, அரசுப் பணிக்குச் செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.