பதிவு செய்த நாள்
24
ஏப்
2017
12:04
தர்மபுரி: மழை வேண்டியும், உலக நன்மைக்காவும், தர்மபுரி, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று சிறப்பு ஜெபம் மற்றும் பூஜை நடந்தது. இதில், மழை வேண்டியும், உலக நன்மைக்காவும், வெட்டிவேர் பந்தல் அமைத்து, சுவசுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மேலும், மழை வேண்டி நீர் நிரப்பிய கொப்பரையில், சுவாமி முன், சிவச்சாரியார்கள் வருண ஜெபத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சுவாமிக்கு பால், பன்னீர் உட்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.