புதுச்சேரி : குரும்பாபேட் ராகவேந்திரா கோவிலில் நேற்று துளசி திருக்கல்யாணம் நடந்தது. குரும்பாபேட் ராகவேந்திரா கோவிலில் துளசி திருக்கல்யாணம் நேற்று காலை 7 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து 10 மணிக்கு சுவாமிக்கு நெய்வேத்தியம், அஸ்தோதகம் நடந்தது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. மகாவிஷ்ணு - துளசி மணகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 7 மணிக்கு சுங்கலி மங்கள திரவியம், 8 மணிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ராகவேந்திரா மடத்தின் ஸ்தாபகர் தேவராஜன், மேலாளர் பாலாஜி ராவ், அர்ச்சகர் ராகவேந்திரா உள்பட உபயதாரர்கள் கலந்து கொண்டனர். பவுணர்மியையொட்டி வரும் 10 ம் தேதி காலை 9.30 மணிக்கு தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், சத்தியநாராயண பூஜை, 8 மணிக்கு ரத உற்சவம் நடந்தது.