பதிவு செய்த நாள்
08
நவ
2011
11:11
புதுச்சேரி : திருக்காமீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு அன்னாபிஷேக விழா நாளை (9ம் தேதி) நடக்கிறது. வில்லியனூரில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் சுவாமிக்கு அன்ன அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். பெரும்பாலான சிவன் கோவில்களில் பவுர்ணமி தினத்தன்றுதான் அன்னாபிஷேகம் நடக்கும். ஆனால், திருக்காமீஸ்வரருக்கு நட்சத்திர அடிப்படையில், அசுவினி நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன்படி, திருக்காமீஸ்வரருக்கு, பவுர்ணமிக்கு முந்தைய தினமான, நாளை (9ம் தேதி) மாலை 6.30 மணிக்கு அன்னாபிஷேக ஆராதனை விழா நடக்கிறது. முன்னதாக, சுவாமிக்கு காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பருவ மழை தவறாமல் பெய்து, உணவு தான்யங்கள் உற்பத்தி பெருகி, மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக அன்னாபிஷேகம் சுவாமிக்கு செய்யப்படுவது ஐதீகமாகும். விழா ஏற்பாடுகளை ஆலயத்தின் சிறப்பு அலு வலர் மனோகரன், உபயதாரர்கள் நடராஜன், பொன்னுரங்கம், ரவிச்சந்திரன், கன்னியப்பன், அண்ணாமலை, முருகன் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்துள்ளனர்.