பதிவு செய்த நாள்
26
ஏப்
2017
11:04
வாலாஜாபேட்டை: மழை வேண்டி, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், 108 சங்காபிஷேகம் நடந்தது. வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், மழை வேண்டியும், வெப்பம்
தணியவும், மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு, 108 சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் நேற்று நடந்தது. முரளிதர சுவாமி இதை செய்தார். பின், பால், தயிர், பழம், சந்தனம், பன்னீர்,
இளநீர் கொண்டு மகா அபிஷேகமும், வில்வ இலைகளாலும், வன்னி இலைகளாலும் அர்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.