பதிவு செய்த நாள்
26
ஏப்
2017
11:04
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஆதிவராகபெருமாள் கோவிலில், வராக ஜெயந்தி உற்சவம் நடந்தது. மாமல்லபுரம், தொல்லியல் பகுதியில் அமைந்துள்ள ஆதிவராக பெருமாள் கோவிலில், நேற்று, வராக ஜெயந்தியை முன்னிட்டு, காலை, ஆதிவராக மூலவர், உற்சவர், தேவியர், அனுமர், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. அதைத் தொடர்ந்து ,ஸ்தலசயன பெருமாள் கோவிலில் எழுந்தருளி, பூதத்தாழ்வாருக்கு மரியாதை அளித்தார். ராமானுஜருடன் வீதியுலா சென்றார். இதற்கடையே, ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு உற்சவத்தை முன்னிட்டு, ஆதிவராகபெருமாள் கோவில் ராமானுஜர், ஸ்தலசயனபெருமாள் கோவிலில் முதன்முறையாக எழுந்தருளி,சுவாமி, தாயார், ஆண்டாள், பூதத்தாழ்வார் ஆகியோர், அவருக்கு மரியாதை அளித்தனர். இரவு, ஆதிவராக பெருமாள், ராமானுஜர் ஆகியோர், குருக்கத்தி மலர் வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்றதை பக்தர்கள் தரிசித்தனர். ஆதிவராகர் கோவிலில் வராக ஜெயந்தி உற்சவம் ஆயிரமாவது அவதார ஆண்டை முன்னிட்டு, ராமானுஜர் வராக ஜெ யந்தியை முன்னிட்டு, ஆதிவராகர், தேவியருடன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.