அட்சய திரிதியை அன்று நடந்த நிகழ்ச்சிகள் புராணங்களில் இடம் பெற்றுள்ளன. * நண்பர் குசேலர் கொடுத்த அவலை, கிருஷ்ணர் சாப்பிட செல்வம் சேர்ந்தது. * குபேரர் இழந்த செல்வத்தைப் பெற்றார். * திருமகள் திருமாலின் மார்பில் இடம் பிடித்தாள். * பரசுராமர், பலராமர் அவதரித்தனர். * முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மா உலகை படைத்தார். * ஆதிசங்கரர் திருமகள் மீது கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார். * திரவுபதி அட்சய பாத்திரம் பெற்றாள். * திரவுபதியை, துச்சாதனன் மானபங்கம் செய்த போது கிருஷ்ணர் ஆடை அளித்து காத்தார்.